Published : 11 Dec 2020 07:30 AM Last Updated : 11 Dec 2020 07:30 AM
கரோனாவிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய போலீஸாருக்கு வரவேற்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய காவலருக்கு சான்றிதழ் வழங்கிய டி.ஐ.ஜி. முத்துச்சாமி. அருகில் மாவட்ட எஸ்.பி, ரவளிபிரியா.
கரோனா தொற்றில் குணமடைந்தவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. டி.ஐ.ஜி. முத்துச்சாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா பழங்கள் வழங்கி வரவேற்றார். டி.ஐ.ஜி. முத்துச்சாமி அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக சிகிச்சை முடிந்து பணிக்கு வந்த போலீஸாருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
WRITE A COMMENT