Published : 10 Dec 2020 03:17 AM
Last Updated : 10 Dec 2020 03:17 AM
தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது 8 பயனாளிகளுக்கு ரூ.4.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து 13.11.2020 அன்று மின்னல் தாக்கி இறந்த அந்தோணி (எ) துரைராஜ் என்பவரின் வாரிசாகிய மனைவி முத்துலட்சுமிக்கு பேரிடர் நிவாரண நிதி ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
கடந்த 7.12.2020 அன்று வீடுகளில் சேதம் ஏற்பட்ட 6 நபர்களுக்கு ரூ.4,100, ஒருவருக்கு ரூ.5,000 என, மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான காசோலைகளை வழங்கினார். தொடர்ந்து வைகுண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார்.
மங்களக்குறிச்சி ஊராட்சியில் ஜெ.ஜெ.எம். திட்டத்தில் 364 வீடுகளுக்கு ரூ.20.46 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருவது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT