Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்புரெவி புயல் எச்சரிக்கையால் உச்சகட்ட கண்காணிப்பு நிவாரண முகாம்களில் 150 பேர் தங்க வைப்பு

புரெவி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவிலில் ரப்பர் படகுகள், மிதவை, பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ள தமிழக பேரிடர் மீட்புக் குழுவினர்.

தூத்துக்குடி/கோவில்பட்டி

3,800 படகுகள் கரைநிறுத்தம்

ஆட்சியர் ஆய்வு

புயலால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க கீழவைப்பாரில் புனித லூயிஸ் மேல்நிலைப்பள்ளியில் நிவாரணம் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல், வேம்பாரில் பல்நோக்கு புகலிடம் மையம் அமைக்கப்பட்டு பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் கீழவைப்பாரில் உள்ள முகாமுக்குவந்தார். அங்கு மக்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள்உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார். மேலும், கீழவைப்பார் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன் தண்ணீர் தேங்கிய தாழ்வான பகுதியை பார்வையிட்டார். அப்பகுதி மக்களிடம் ‘புரெவி’ புயல் குறித்தும், அதனை எதிர்கொள்ள அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியதுடன், நிவாரண முகாமில் தங்குமாறும் அறிவுறுத்தினர். தொடர்ந்து, வேம்பார் கிராமத்துக்கு சென்றுஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். விளாத்திகுளம் வட்டாட்சியர் பி.ரகுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 93 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x