Published : 03 Dec 2020 03:15 AM
Last Updated : 03 Dec 2020 03:15 AM
வெளிநாடு செல்பவர்களின் ஆவணங்களை சரிபார்த்து முத்திரையிட இணையவழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெளிநாடுகளில் வேலை, கல்வி மற்றும் சார்பு நுழைவு இசைவு கோரும் இந்தியர் கள், வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு கல்விச் சான்றிதழ்கள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் முத்திரையிடப்பட வேண்டும் என்று சில நாடுகள் கோருவதால், இந்த ஆவணங்களை இணைய வழியில் சரிபார்த்து முத்திரையிடுவதற்கு ஏதுவாக மத்திய அரசு இணைய வழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு வழங்கப் படும் சான்றிதழ்கள், பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள், e-sanad இணைய வழி மூலம் சரிபார்க்கப்பட்டு முத்திரையிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற் காணும் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பு வோர் தொடர்புடைய தூதரகங்கள் முத்திரையிடப்பட்ட சான்றிதழ் கோரும் பட்சத்தில், பொதுமக்கள் www.esanad.nic.in என்ற இணையத்தில் விவரங்களைப் பதிவு செய்து, ஆவணங்களைப் பிடிஎப் வடிவில் பதிவேற்றம் செய்து, உரிய கட்டணம் செலுத்தினால், இணைய வழியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, மத்திய வெளியுறவு அமைச்சகத்தால், அவரவர் வீடுகளுக்கே சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப் படும். இந்த இணையவழிச் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT