Published : 14 Nov 2020 03:14 AM
Last Updated : 14 Nov 2020 03:14 AM
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களைப் போல் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சலுகை வழங்கக் கோரிய மனு மீது சுகாதாரத் துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகாசி ஆனையூரைச் சேர்ந்த துர்காதேவி என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
சிவகாசி அரசு உதவி பெறும் பள்ளி யில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 1119 மதிப்பெண் பெற்றேன். தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அரசியலமைப்புச் சட்டப்படி அனை வருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்து, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்க உத் தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி விசாரித்து, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT