Published : 13 Nov 2020 03:17 AM
Last Updated : 13 Nov 2020 03:17 AM
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் "தந்தேராஸ்" பண்டிகை பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
தந்தேராஸ் என்கிற வார்த்தை இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. 'தன்' என்றால் செல்வம் என்று பொருள். இந்து நாட்காட்டியின் படி 'தேராஸ்' என்பதற்கு 13வது நாள் என்று பொருள். அதன்படி, இந்தாண்டு இன்று தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
தந்தராஸ் நாளில் மாலையில் வீட்டில் விளக்குகள் ஏற்றி, லட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இந்து பாரம்பரியத்தின் படி, புதிய கொள்முதல், குறிப்பாக தங்கம் அல்லது வெள்ளி மற்றும் புதிய பாத்திரங்கள் வாங்குவதற்கு தந்தேராஸ் மிகவும் நல்ல நாள் என்று கருதப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது பல்கிப் பெருகும் என்று நம்பப்படுகிறது.
கரோனா காலங்களில் ஊரடங்கு உத்தரவின் போது பொதுமக்களால் அட்சயத்ரிதியை மற்றும் ஆடிபெருக்கு நன்னாளில் யாராலும் தங்கம் வெள்ளி பொருட்கள் வாங்க முடியவில்லை, இந்த தந்தேராஸ் நாளில் நீங்கள் வாங்கும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வைத்து, வீட்டில் லட்சுமி பூஜை செய்தால் பல்கி பெருகும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக தங்கமயிலில் தீபாவளி நாளில் சிறப்பு விற்பனை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விற்பனை நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT