Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM

தீபாவளியையொட்டி பூக்கள் விலை உயர்வு

மதுரை

தீபாவளிப் பண்டிகை நெருங்கு வதால் பூக்கள் விலை அதிகரித்து வருகிறது.

2 நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.250-க்கு விற்றது. நேற்று முன்தினம் ரூ.380-க்கு விற்றது. இந்நிலையில், நேற்று கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.

இதுகுறித்து மலர் சந்தை வியாபாரி ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘மல்லிகை ரூ.600, பிச்சிப்பூ ரூ.300, முல்லைப்பூ ரூ.400 செவ்வந்தி ரூ.150-க்கு விற்கிறது. மற்ற பூக்களின் விலை இன்னும் 2 நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரத்து குறைவால் மல்லிகைப்பூ இனி விலை குறைய வாய்ப்பில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x