Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM

தேர்தல் விழிப்புணர்வுக்காக பொதுமக்களுக்கு இணையவழி போட்டிகள்

தேனி: தேர்தல் நடைமுறைகளில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் இணையவழிப் போட்டிகளை அறிவித்துள்ளது. இதன்படி சுவரொட்டி வரைதல், கவிதை, பாடல்கள் எழுதுதல், வாசகம் எழுதுதல் போட்டிகளை அறிவித்துள்ளது.

இவற்றை www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். இணையதளம் மூலமாக போட்டிகள் நடத்தப்படும். நூறு சதவீதம் வாக்காளர் பட்டியல் பெயர் பதிவு மற்றும் வாக்குப் பதிவை அடைவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்ற தலைப்பில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இப்போட்டியில் நவம்பர் 18-ம் தேதி மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். முதல் மூன்று பரிசுகளாக ரூ.10 ஆயிரம், ரூ.7ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மேலும் சட்டப் பேரவைத் தேர்தலுக்காக தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான குறும் படம், உயிர்ப்பூட்டல் படங்கள், தேர்தல் பாடல்கள், மீம்ஸ் ஆகியவற்றைத் தயாரிக்கும் ஆர்வம் உள்ள ஊடக நிறுவனங்கள், தனி நபர்களிடம் இருந்து விலைப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இவற்றை நவம்பர் 18 மாலை 5 மணிக்குள் மேற்கண்ட இணைய முகவரியில் சமர்ப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ம.பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x