Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

தாயை கொன்று தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

தென்காசி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி இசக்கியம்மாள் (48). இவர்களுக்கு மாரிச்செல்வம், மணிரத்தினம் என்ற மணிகண்டன் (27) என 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மாரிச்செல்வம் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மணிரத்தினம் கூலி வேலை பார்த்து வந்தார்.

சுப்பிரமணியன் பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால், 2 மகன் களையும் இசக்கியம்மாள் வளர்த்து வந்தார்.

இந்நிலையில், மணிரத்தினம் சற்று மனநிலை பாதிக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இசக்கியம்மாள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது, அவரது தலையில் கல்லைப் போட்டு மணிரத்தினம் கொலை செய்தார். பின்னர், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிரத்தி னம் உயிரிழந்தார். ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x