Published : 15 Dec 2021 03:08 AM
Last Updated : 15 Dec 2021 03:08 AM
விருத்தாசலம் அருகே கருவேப் பிலங்குறிச்சி அருகில் தீவலூர் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தின் வழியாக மழை நீர் செல்லும் ஓடை செல்கிறது. இந்த ஓடையை கடந்து தான் தீவலூர், தாழநல்லூர், கோனூர், சாத்துக் கூடல் கீழ்பாதி, மேல்பாதி, ஆலிச்சிக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விருத்தாசலம் மற்றும் பெண் ணாடம் நகரங்களுக்கு சென்று வர முடியும்.
ஆலிச்சிக்குடி சாத்துக் கூடல் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து செல்லும் பள்ளி மாணவர்கள் இந்த ஓடையை கடந்துதான் நாள்தோறும் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். மழைக்காலங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடு வதால் இந்த ஓடையில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அந்த தருணங்களில் இப்பகுதி மக்கள் பெண்ணாடம், விருத்தா சலம் பகுதிகளுக்கு செல்ல முடி யாமல் கடும் அவதியடைந்து வரு கின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இப்பகுதி பள்ளி மாணவர் ஒருவர், ஓடையை கடக்க முயன்ற போது ஓடையில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. மேலும் சில பள்ளி மாணவர்களும் ஓடைவெள்ளத்தில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டு, அப்பகுதி இளை ஞர்களால் மீட்கப்பட்டனர். இந்த ஓடையில் உயர்மட்டப் பாலம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் அந்தப் பாலத்தை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது.
வெள்ள பாதிப்பால் இந்த தரைப் பாலத்தை கடந்து செல்லும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி பேருந்துகள் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக இயக் கப்படாமல் உள்ளன.
இந்த நிலையில் நேற்று மாவட்ட நிர்வாகம் உடனடியாக உயர்மட்டப் பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாயவேல் தலைமையில் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், விவ சாய கூலித் தொழிலாளர்கள் ஓடைதரைப்பாலத்தில் நின்றும், தண்ணீரில் இறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி னர். அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT