Published : 13 Dec 2021 03:08 AM
Last Updated : 13 Dec 2021 03:08 AM
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 கிலோ ஃப்ரீ ட்ரேட்எல்பிஜி சிலிண்டர், ‘சோட்டு’என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஓர் ஆண்டுநிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில்கவாஸ்கர் கலந்து கொண்டார். இதில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா, இயக்குநர் (மார்க்கெட்டிங்) வி.சதீஷ் குமார் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகமான ‘சோட்டு’ மிகவும் பிரபலமான எல்பிஜி பிராண்ட்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. சோட்டுசிலிண்டர் விற்பனை 58.5 சதவீதம் வளர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நாடெங்கிலும் ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் ஃப்ரீ ட்ரேட் எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனையாகின்றன.
சோட்டுவின் முதல் ஆண்டு நிறைவில் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட சுனில்கவாஸ்கர், “வரும் காலங்களில் ஒவ்வொரு வீட்டின்மதிப்புமிக்க இன்றியமையாத ஒன்றாக சோட்டு பரிமாணம் பெறும்” என்று குறிப்பிட்டார்.
கொண்டாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ஐஓசி தலைவர் வைத்யா, “மக்களால் ‘லிட்டில் மாஸ்டர்’ என்று அன்புடன் அழைக்கப்படும் சுனில் கவாஸ்கர், இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியது போலவே, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சோட்டு, இந்திய சமையலறைகளில் செயல்படும்” என்று குறிப்பிட்டார்.
சோட்டு இண்டேன் எல்பிஜி நாடெங்கிலும் 20ஆயிரத்துக்கும் மேற்பட்டஇடங்களில் கிடைக்கிறது.சோட்டு பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாளச் சான்றைசமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இது கையாள்வதற்கு எளிதானது, பாதுகாப்பானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT