Published : 08 Dec 2021 04:09 AM
Last Updated : 08 Dec 2021 04:09 AM
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சேலம் கிளை அலுவலகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் இன்று (8-ம் தேதி) முதல் வரும் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், சேலம் கிளை அலுவலகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் இன்று (8-ம் தேதி) முதல் வரும் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், 6 சதவீதம் வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.
முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொதுகடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும்.
இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொண்டு, தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 94431 10899, 99622 65515 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் கடன் திருவிழா
இதுபோல, ஈரோடு பெரியார் நகர் 80 அடி சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக (டிஐஐசி) ஈரோடு கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா இன்று தொடங்கி 15-ம் தேதி வரை நடக்கிறது, என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT