Published : 05 Dec 2021 04:08 AM
Last Updated : 05 Dec 2021 04:08 AM

திருச்செந்தூர் பகுதியில் மழையால் - சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரண உதவி : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் மீன்பிடிக்கச் சென்றபோது கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் சென்ட்ரின் வீட்டுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்று ஆறுதல் கூறினார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் பகுதியில் தொடர்மழையின் காரணமாக வீடுகள்சேதம் அடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேல ஆத்தூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் பகுதியானவீடு சேதமடைந்த 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5,200 நிதியுதவியை மீன்வளம் -மீனவர் நலன் மற்றும் கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். மேலும் அமைச்சர் தனது சொந்த நிதியில் இருந்து 9 பேருக்கு தலா ரூ.5,000 வழங்கினார்.

பகுதியளவு வீடு சேதம் அடைந்த 2 பேருக்கு வெள்ளக்கோவில் இந்து நடுநிலைப்பள்ளியில் வைத்து ரூ.5,200 நிதியுதவி வழங்கப்பட்டது.

ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கசென்றபோது கடலில் தவறிவிழுந்து உயிரிழந்த ஆலந்தலையைச் சேர்ந்த சென்ட்ரின், மணப்பாடைச் சேர்ந்த விஜயன் ஆகியோர் வீடுகளுக்கு அமைச்சர் நேரில்சென்று, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்தநிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம்வழங்கினார். அரசு மூலம் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், கோட்டாட்சியர் கோகிலா, வட்டாட்சியர் சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x