Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM

பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசென்ட் கல்லூரியில் - எம்பிஏ, எம்சிஏ ஆன்-லைன் படிப்புகள் அறிமுகம் :

பி.எஸ். அப்துர் ரகுமான் கிரசென்ட் அறிவியல், தொழில்நுட்ப கல்லூரியில் ஆன்-லைன் எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் அறிமுக விழாவில் துணைவேந்தர் ஏ.பீர் முகமது, பதிவாளர் ஏ.ஆசாத், கூடுதல் பதிவாளர் என்.ராஜா ஹூசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை

பி.எஸ். அப்துர் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆன்-லைன் வழியே படிக்கும் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டன.

யுஜிசி வகைப்படுத்திய மற்றும் அகிலஇந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் அங்கீகரித்தபடியே இந்தப் புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பணியில் இருந்து கொண்டே உயர் கல்வியைப் படிக்க நினைப்போரின் வசதிக்காக அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய கட்டணம், நேரத்தில் ஆன்-லைனில் படிக்கும் வகையில் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில், பி.எஸ். அப்துர் ரகுமான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் ஏ.பீர் முகமது, பதிவாளர் ஏ.ஆசாத், கூடுதல் பதிவாளர் என்.ராஜா ஹூசைன், இயக்குநர் (சேர்க்கைகள்) எஸ்.எஸ்.எம். அப்துல் மஜீத், இயக்குநர் (உயர்நிலை கல்வி சேர்க்கை) எஸ்.காஜாமொகைதீன், இயக்குநர் (தொலைநிலை மற்றும் ஆன்-லைன் கல்வி) வி.ரேமண்ட் உத்திரியராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

திறமையான, தகுதி படைத்த ஆசிரியர்களைக் கொண்டு ஆன்-லைன் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் படைப்பாற்றலைமேம்படுத்தும் வகையில்பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆன்-லைன் பாடத்தில் இணைவதற்கான சேர்க்கை நடைமுறைகள் பி.எஸ். அப்துர்ரகுமான் கல்லூரியில் நடைபெற்று வருகின்றன. மேலும் விவரங்களுக்கு www.online.crescent-institute.edu.in அல்லது www.crescent.education இணையதளங்களை காணலாம். 95432 77888என்ற எண்ணில் அழைக்கலாம். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x