Published : 30 Nov 2021 03:09 AM
Last Updated : 30 Nov 2021 03:09 AM
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தது. இதனால், நன்னிலம், திருக்கண் டீஸ்வரம், வாஞ்சியம், அச்சுதமங்கலம், மாப்பிள் ளைக்குப்பம், அதம்பாவூர், தென்குடி, குடவாசல், சிமிலி, மனப்பறவை, அரித்துவாரமங்கலம், வலங்கைமான் பகுதிகள் மற்றும் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று மழை பெய்யாததால், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனாலும், ஆறுகள், வடிகால் வாய்க்கால்களில் அதிகளவில் தண்ணீர் செல்வதால், சம்பா, தாளடி வயல்களில் உள்ள தண்ணீர் வடிகால்களில் வடிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, இன்னும் ஓரிரு நாட்கள் இதேபோன்று மழை பெய்யாமல் இருந்தால் சம்பா, தாளடி வயல்களிலிலிருந்து முற்றிலும் தண்ணீர் வடிந்து, பயிர் பாதிக்கும் தன்மை குறையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT