Published : 28 Nov 2021 03:07 AM
Last Updated : 28 Nov 2021 03:07 AM
ஜி.எஸ்.டி. வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டுமென தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின் (சைமா) தலைவர் ‘வைகிங்’ ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் பின்னலாடைகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விகிதத்திலிருந்து 12சதவீதமாக உயர்த்தியும், ரூ.1,000-க்கு குறைவான விற்பனைக்கு, சலுகையை ரத்து செய்தும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அதிர்ச்சியளிக்கிறது. ஒரு தொழிலாளி குறைந்தபட்சம் 2 செட் பின்னலாடைகள் வாங்கினாலே ரூ.500-க்குமேல் விலையாகும். அதற்கான ஜி.எஸ்.டி. வரியும் தற்போது உயர்ந்துள்ளது. அடித்தட்டு மக்களிடம் இருந்து வரும் வருமானத்தை, இந்த அரசு விரும்பாது என்று நம்புகிறோம்.
கடந்த 18-ம் தேதியன்று ஜி.எஸ்.டி. வரி அறிக்கை, ஏழை மக்களுக்கும், வியாபாரிகளுக்கும், பின்னலாடை நிறுவனங்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். ரூ.1,000-க்கு கீழ்விற்பனையாகும் பின்னலாடைகளுக்கு சலுகையை நீட்டிக்கவேண்டும் அல்லது குறைந்த பட்சம்ரூ.500-க்கு கீழ் விற்பனைக்காவது சலுகை அளிக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT