Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், மேலமையூர் ஊராட்சி செயலாளராக பணி புரிபவர் ஆறுமுகம். இந்நிலையில் ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகள் தொடர்பான வரவு - செலவு தணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) ஜெயந்தி கவனித்திருக்கிறார். ஜெயந்தி தன்னிடம் சொந்த வரவுசெலவு கணக்கைக் கேட்டுதொல்லை செய்து மிரட்டுவதாகவும் தன்னிடம் ஏதோ பலன் எதிர்பார்த்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறார். இதனால் எனக்குமன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே என் மனைவியுடன் சேர்ந்துநான் தற்கொலை செய்து கொள்ளஇருக்கிறேன் எனக் கூறி வாட்ஸ் ஆப்பில் ஊரக வளர்ச்சித் துறைஅதிகாரிகளுக்கு ஆறுமுகம் தகவல் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஊராட்சி செயலாளர் ஆறுமுகத்தை கேட்டபோது, “ஊராட்சியில் தணிக்கை நடைபெறுகிறது. வரவு செலவுகணக்கில் ஏதேனும் தவறு இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதை விட்டுவிட்டு எனது சொந்த வரவு - செலவுகளைக்கேட்டு தொல்லை செய்கிறார். அவரின் செயல்கள் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் உயர் அதிகாரிக்கு தகவல் அனுப்பினேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT