Published : 19 Nov 2021 03:09 AM
Last Updated : 19 Nov 2021 03:09 AM

அடையாறு ஆற்றில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேறுகிறது :

தாம்பரம்: மழை நின்றாலும் நீர் வரத்து அதிகமாக இருப்பதால், அடையாறு ஆற்றில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேறுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பின. அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேறி, அடையாறு ஆற்றுக்கு வருகிறது. அதே போல் குடியிருப்பு பகுதிகளில் கால்வாய் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. ஆற்றில் விநாடிக்கு 6,000 கன அடி நீர் வெளியேறுகிறது. ஆற்றில் 6.5 அடி வரை மழைநீர் செல்கிறது.

அடையார் ஆற்றுக்கு வரும் உபரிநீர் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அடையாறு ஆற்றைச் சுற்றியுள்ள 127 ஏரிகளும் நிரம்பி விட்டதால் அனைத்து தண்ணீரும் அடையாற்றில் வந்து சேருகிறது. தொடர்ந்து மழை அதிகரிக்கும் பட்சத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காஞ்சி, செங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘எதற்கும் தயார் நிலையில் இருக்கிறோம்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x