Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM
சேலம் மாவட்டத்தில் இன்று (17-ம் தேதி) தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மக்கள் குறைதீர் சிறப்பு முகாம் நடக்கவுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தி பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று தீர்வு காண உள்ளார். முகாம் இன்று காலை 9 மணிக்கு தலைவாசல் வட்டாட்சியர் அலுவலகத்திலும், காலை 10 மணிக்கும் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், காலை 11 மணிக்கு கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மதியம் 3 மணிக்கும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், மாலை 4 மணிக்கு வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மாலை 5 மணிக்கு மணியனூரில் உள்ள சேலம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளன.
நாளை (18-ம் தேதி) காலை ஓமலூர், காடையாம்பட்டி, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டத்துக்கு அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகிறது. வரும் 19-ம் தேதி சூரமங்கலம் மண்டலம் மற்றும் சேலம் மேற்கு வட்டங்களுக்கு சேலம் காசக்காரனூரில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியிலும், அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியிலும், அம்மாப்பேட்டை மண்டலத்துக்கு அம்மாப்பேட்டை சக்தி கைலாஷ் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி கல்லூரியிலும் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT