Published : 17 Nov 2021 03:08 AM
Last Updated : 17 Nov 2021 03:08 AM
அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தூத்துக்குடி பிரிவு மருத்துவ இயக்குநர் எஸ்.பெர்னார்டு ஆல்பர்ட் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள நபர்களுக்கு இலவச கண் மருத்துவ ஆலோசனை அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் நவம்பர் மாத இறுதி வரை வழங்கப்படுகிறது. மற்ற வயது பிரிவுகளைச் சேர்ந்த நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவு நோயின் அறிகுறிகள் தொடக்க கட்டத்தில் முழுமையாக வெளிப்படாத நிலையில் இருக்கும் என்பதால், நீரிழிவு உறுதிசெய்யப்பட்டவுடன் விரைவாகவே கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பு கண்டறியப்படுமானால் நீரிழிவு சார்ந்த விழித்திரை அழிவினால் ஏற்படும் பார்வைத்திறன் இழப்பை எளிதாக தவிர்க்க முடியும்.
அதிக ரத்த அழுத்தம், குருதி கொழுப்பு மிகை, ரத்த சோகை, சிறுநீரக நோய்கள் மற்றும் புகைபிடித்தல் ஆகியவை விழித்திரை அழிவு நோய்க்கான காரணங்களாக இருக்கின்றன. எனவே, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் என்றார் அவர்.
முன்னதாக, அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் ரியாஸ் சிவில் சர்வீசஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தி.சாருஶ்ரீ மற்றும் டெல்லி தேசிய மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பி.ராமசுவாமி பங்கேற்று பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT