Published : 12 Nov 2021 03:17 AM
Last Updated : 12 Nov 2021 03:17 AM

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழை குறைந்தது :

திருநெல்வேலி, தென்காசி

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மழையின் தீவிரம் குறைந்தது. நேற்று பகலில் பெரும்பாலான இடங்களில் மிதமான வெயில் காணப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி, இரவு 9 மணி வரை பரவலாக மழை பெய்தது. அதன்பிறகு மழையில்லை.

நேற்று பகலிலும் மிதமான வெயில் அடித்தது. மாலையில் ஒருசில இடங்களில் சாரல் மழை பெய்தது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):

மூலக்கரைப்பட்டி- 80, ஆய்க்குடி- 32, திருநெல்வேலி- 28, கருப்பாநதி-26, அடவிநயி னார்- 20, நம்பியாறு- 18 , குண்டாறு- 17, தென்காசி-14, பாபநாசம்- 13 , சிவகிரி மற்றும் கடனா- 12, சேர்வலாறு மற்றும் கொடுமுடியாறு- 10, செங்கோட்டை- 9, பாளையங் கோட்டை- 6, சங்கரன்கோவில்- 5, ராம நதி- 3 ,களக்காடு- 2.2, அம்பாசமுத்திரம்- 0.5.

இரு மாவட்டங்களிலும் உள்ள அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):

பாபநாசம்- 135.50 அடி (143 அடி), சேர்வலாறு - 139.89 (156), மணிமுத்தாறு- 85.95 (118), வடக்கு பச்சையாறு- 22 (50), நம்பியாறு- 10.23 (22.96), கொடுமுடியாறு- 50 (52.25), கடனா- 82.10 (85), ராமநதி- 81.25 (84), கருப்பாநதி- 68.24 (72), குண்டாறு- 36.10(36.10 ), அடவிநயினார்- 121.75 (132.22).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x