Published : 12 Nov 2021 03:18 AM
Last Updated : 12 Nov 2021 03:18 AM
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 4 சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்டங்களில் வெள்ள கண்காணிப்பு அலுவலர்கள் நேரில்ஆய்வு செய்ததுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பரவலான மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி குடியாத்தம் 19.2, காட்பாடி 16.8, மேல் ஆலத்தூர் 17.4, பொன்னை 17.1, வேலூர் 20.2, அம்முண்டி 21.62, அரக்கோணம் 38, ஆற்காடு 19.8, காவேரிப்பாக்கம் 34, வாலாஜா 26.8, அம்மூர் 15, சோளிங்கர் 34.2, கலவை 30.7 மி.மீ மழை பதிவாகியிருந்தன.
வேலூர்,ராணிப்பேட்டை மாவட் டங்களில் பொதுப்பணி, வருவாய், காவல், தீயணைப்பு துறை அடங்கிய கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மழை பாதிப்பால் வேலூர் மாவட்டத்தில் 2 முகாம்களில் 44 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2 முகாம்களில் 98 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், போர்வை உள்ளிட்ட வசதிகளை வருவாய்த்துறையினர் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
மழை சேத பாதிப்புகள்
நீர் நிலைகள் நிலவரம்
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் நேற்று 4,200 கனஅடி, பொன்னை ஆற்றில் 1,500 கனஅடி, அகரம் ஆற்றில் 600 கனஅடி, மலட்டாற்றில் 1,000 கனஅடிக்கு நீர்வரத்து இருந்தது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 56 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 4 ஏரிகளில் 75% அதிகமாகவும், 4 ஏரிகளில் 50% அதிகமாகவும் நீர் இருப்பு உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 369 ஏரிகளில் 176 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 19 ஏரிகளில் 75% அதிகமாகவும், 37 ஏரிகளில் 50% அதிகமாகவும் நீர் இருப்பு உள்ளது.
சிறப்பு அலுவலர்கள் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்சால் பேட்டை உள்ளிட்ட மழை நீர் தேங்கும் இடங்களை மாவட்ட வெள்ள கண்காணிப்பு அலுவலர் நந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இதனை தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் கண்காணிப்பு அலுவலர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT