Published : 09 Nov 2021 03:10 AM
Last Updated : 09 Nov 2021 03:10 AM
ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் க.வீ.முரளீதரன் முன்னிலை வகித்தார். தேனி எம்பி ப.ரவீந்திரநாத் இவற்றை வழங்கினார். 7 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்து 685 மதிப்பீட்டில் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சகுந்தலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்கரை பேரூராட்சியில் பயணியர் நிழற்குடை, தங்கம்மாள்புரத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, ஆழ்துளை கிணறு மின்மோட்டார் மற்றும் குழாய் அமைத்தல், உப்புக்கோட்டை ஆரம்பப் பள்ளியில் கூடுதல் கட்டிட வகுப்பறை உள்ளிட்ட நலத்திட்டங்களை எம்.பி. தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT