Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM
விழுப்புரம் நகராட்சி 1.10.1919-ல்3-ம் நிலை பேரூராட்சியாக தொடங்கப்பட்டது. பின்னர் 2.3.1988-ல் தேர்வுநிலை நகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டு 30.9.2019-ல் நூற்றாண்டு நிறைவு பெற்றுள்ளது. விழுப்புரம் நகரின்வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக கடந்த ஆட்சியில் ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ரூ.4.5 கோடி மதிப்பிட்டில் விழுப் புரம் நகராட்சி பயணியர் விடுதி உள்ள இடத்தில் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்தஆட்சியில் தொடங்கப்பட்டு நடை பெற்று வருகிறது.
தற்போதுள்ள நகராட்சி அலுவ லகம் இயங்கிவரும் இடத்தை என்ன செய்ய நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்ற கேள்விக்கு இன்னமும் எவ்வித முடிவும் எடுக் கப்படவில்லை. கடந்த ஆட்சியில் வணிக நிறுவனம் ஒன்றுக்கு 99 வருட குத்தகைக்கு விடுவதாக முடிவெடுக்கப்பட்டு அது செயல்பாட்டிற்கு வருவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்றுநகராட்சி அலுவலர்கள் தெரிவித் தனர்.
தற்போது நகராட்சி அலுவலகம் இயங்கிவரும் இடத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று விழுப்புரம் வாழ் மக்களிடம் கேட்டபோது, கடலூரில் உள்ளது போல ‘டவுன் ஹால்' ஒன்றை கட்டினால் அரசு நிகழ்ச்சிகளும், அரசு நிகழ்ச்சிகள் இல்லாதபோது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அளிப்பதால் நகராட்சிக்கு கூடுதல்வருவாய் கிடைக்கும். நகரின்மையப்பகுதியில் அமைந்துள்ள தால் டவுன் ஹாலாக அமைத்தால் விழுப்புரம் நகர்வாழ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
இது குறித்து விழுப்புரம் எம்எல்ஏலட்சுமணனிடம் கேட்டபோது, "நல்ல யோசனை, இது குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச் சர் கே.என் .நேருவிடம் கோரிக்கை வைக்கப்பட்டு, இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
விழுப்புரத்தில் தற்போது இயங்கி வரும் நகராட்சி அலுவலகத்தை இடித்து விட்டு புதியஅலுவலகம் கட்டுவது என்ற முடிவு 1996 – 2001ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்டது.
புதிய கட்டிடம் கட்டும் வரை பயணியர் மாளிகையில் நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக இயங்குவது என்றும் முடிவெடுக் கபட்டது.
ஆனால் கடந்த ஆட்சியில் பயணியர் மாளிகையையே நக ராட்சி அலுவலகமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT