Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM

மழைக்கால வெள்ளத்தில் கூடுதல் கவனம் தேவை - நீர்நிலைகளில் குழந்தைகளை குளிக்க அனுமதிக்காதீர் :

நீர்நிலைகளின் அபாய நிலை குறித்து கோமுகி அணைப் பகுதியில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறையினர்.

கள்ளக்குறிச்சி

மழை வெள்ளத்தால் நீர்நிலைகள் நிறைந்து வருவதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை, அதில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் அனைத்தும் மழைநீர்சேகரிப்பதற்காக ஆழப்படுத்தப் பட்டு தூர் வாரப்பட்டுள்ளது. தற் போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் அனைத்து ஏரிகள், குளங்களில் நீர் நிரம்பி வருகின்றன. ஆழப்படுத்தப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் அதிகளவில் நீர் தேங்கியுள்ளது. விடுமுறை நாட்களில், கிராமப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் இந்த நீர் நிலைகளில் சென்று குளிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

‘பெற்றோர் தங்கள் குழந்தை களை நீர் நிலைகளுக்கு சென்று குளிக்க அனுமதிக்க கூடாது’ என்று உத்தரவிட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட் டிருந்தார்.

அதன்படி கோமுகி அணையின்அருகே ஒலிபெருக்கி மூலம் பொது மக்களிடையே காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பெற்றோர், தங்களின் குழந்தை களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

விடுமுறையை கொண்டாடுவ தற்காக ஆறு, குளம், ஏரி மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் குளிக்கசிறார்கள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களின் குழந்தை களை பார்த்துக் கொள்ள வேண் டும்.

‘குழந்தைகள் எங்கு செல்கிறார் கள்? என்ன செய்கிறார்கள்?’ என்பதை பெற்றோர் கவனமாக கண்காணிக்க வேண்டும். குழந்தைக ளுக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும் தனியாக ஆறு, குளம், ஏரி, கண்மாய் மற்றும் அணைக்கட்டுகளில் சென்றுகுளிப்பதை தவிர்க்க வேண்டும்.

நீர்நிலைகளில் சுழல் உள்ள பகுதிகள், புதை மணல் உள்ள பகுதிகள், சகதி நிறைந்த பகுதிகள், ஆழமான பகுதிகள் போன்ற இடங்களின் தன்மை அறியாமல் குளிக்கச் செல்வதோ, குட்டிக்கரணம் அடித்து குளிப்பதோ கூடாது.

குடிபோதையில் நீர் நிலைக ளுக்கு குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும். குறைந்தபட்ச உயிர் பாதுகாப்பு முதலுதவி முறை களை தெரிந்து வைத்திருக்க வேண் டும் என்று கூறி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x