Published : 07 Nov 2021 03:08 AM
Last Updated : 07 Nov 2021 03:08 AM
தூத்துக்குடி கணேஷ் நகரிலுள்ள மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் உயிர்மீட்பு கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட தீயணைப்பு மீட்பு பணித்துறை அலுவலர் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “ மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் 12 நீர் இறைக்கும் பம்புகள்,இயந்திரத்துடன் கூடிய 5 படகுகள், 160 உயிர் காக்கும் மிதவைகள், 160 லைப் ஜாக்கெட், 2 இன்பேலடபிள் லைட், 11 பவர்ஷா, மணிலா கயிறு மற்றும் நைலான் கயிறுகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் உள்ளன. புயல், மழை, பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பெரும் அழிவுகளை குறைக்க பொதுமக்கள் அவசர உதவிக்கு 101 மற்றும் 112 என்ற எண்களை தொடர்புகொள்ள வேணடும்.
மாவட்டத்திலுள்ள 10 தீயணைப்பு- மீட்பு பணி நிலையங்களின் எல்கைக்கு உட்பட்ட பகுதியில் மிகவும் பாதிக்கப்படும் பகுதிகளாக 13 இடங்களும், மிதமாக பாதிக்கப்படும் பகுதிகளாக 11 இடங்களும், குறைந்த அளவு பாதிக்கப்படும் பகுதிகளாக 12 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதி மக்கள் மழை வெள்ள அபாய காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்த ஒத்திகை பயிற்சிகள் மாவட்டம் முழுவதும் 180 இடங்களில் அளிக்கப்பட்டுள்ளது. மழைவெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில், மாவட்டம் முழுவதும் சுமார் 53 தன்னார்வ தொண்டர்கள், 221 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT