வியாழன், டிசம்பர் 26 2024
Last Updated : 04 Nov, 2021 03:12 AM
Published : 04 Nov 2021 03:12 AM Last Updated : 04 Nov 2021 03:12 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக விடாமல் பெய்து வருகிறது. இதனால் நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் நந்திவரம், கூடுவாஞ்சேரி, செம்பாக்கம், உள்ளிட்ட 40 ஏரிகள் முழு அளவில் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும், 75 முதல் 100 சதவீதம் வரை 32 ஏரிகளுக்கும், 50 முதல் 75 சதவீதம் வரை 102 ஏரிகளுக்கும், 50 சதவீதம் வரை 209 ஏரிகளுக்கும், 25 சதவீதம் வரை 145 ஏரிகளுக்கும் நீர்வரத்து உள்ளதாக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT