Published : 04 Nov 2021 03:13 AM
Last Updated : 04 Nov 2021 03:13 AM

அரையூர் தென்பாதியில் மயான சாலை அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் :

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் அரையூர் தென்பாதி, கரம்பை தெருவில் உள்ள மயானத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அரையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளையின் 23-வது மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆறுமுகம் தலைமை வகித்தார். கிளை செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில், ஊராட்சி பகுதிகளில் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும். கரம்பை தெருவில் வசிப்போர் இறந்தவர்களை மயானத்துக்கு எடுத்துச் செல்ல சாலை இல்லாமல் வயல்கள் மற்றும் வாய்க்கால் வழியே சடலங்களை சுமந்து செல்லும் நிலை உள்ளது. இதைபோக்க, அப்பகுதியில் மயானத்துக்கு செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும். அரையூரிலிருந்து அரசமங்கலம் செல்லும் வகையில் இணைப்புச் சாலை அமைத்து, பாலம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x