Published : 04 Nov 2021 03:14 AM
Last Updated : 04 Nov 2021 03:14 AM

சென்னை தலைமை செயலகத்தில் மரம் விழுந்ததில் உயிரிழந்த - பெண் காவலர் உடலுக்கு அமைச்சர் ஆர்.காந்தி அஞ்சலி :

உயிரிழந்த பெண் காவலர் உடலுக்கு அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ராணிப்பேட்டை

தலைமை செயலகத்தில் மரம் விழுந்ததில் உயிரிழந்த பெண் காவலர் உடலுக்கு அமைச்சர் ஆர்.காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த காவனூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் கவிதா(42). இவர், சென்னை முத்தியால்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார்.

சென்னை தலைமைச் செய லகத்தில் நேற்று முன்தினம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் கவிதா ஈடுபட்டிருந்தார். கடந்த ஒரு வாரமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முதலமைச்சர் தனிப் பிரிவு அருகே உள்ள கூடார பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை கவிதா நிறுத்த முயன்றார்.

அப்போது, அதன் அருகே இருந்த பழமையான மரம் திடீரென வேருடன் பெயர்ந்து, கூடாரம் மீது சாய்ந்து அருகில் நின்றிருந்த கவிதா மீது மரம் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கவிதா உடல் நசுங்கி உயிரிழந்தார். கவிதாவின் உடல் அவருடைய சொந்த ஊரான ஆற்காடு அடுத்த காவனூர் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையறிந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபாசத்யன் ஆகியோர் நேற்று காலை காவனூர் சென்று அங்கு கவிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, பொதுமக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத் தினர். பிறகு, 21 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதை யுடன் கவிதாவின் உடல் அருகே உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கவிதாவின் கணவர் சாய்பாபா ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் அருண் குமார் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மகள் சினேகா பிரியா நர்சிங் படித்து வருகிறார். 2வது மகன் விஷால் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x