Published : 03 Nov 2021 03:09 AM
Last Updated : 03 Nov 2021 03:09 AM

உர தட்டுப்பாட்டால் நெல் சாகுபடி பாதிப்பு : குறைதீர் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் உரங் களின் தட்டுப்பாட்டால் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சிவராமன், வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஷ்வரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் யூரியா, டிஏபி உரங்களுக்குத் தட்டுப்பாடு நிலவு கிறது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு வந்த உரங்களை அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்குகின்றனர். தனி யார் உரக்கடைகளிலும் உரம் கிடைக்கவில்லை.

இளையான்குடி பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்க்கு இதுவரை காப்பீட்டு இழப்பீடு தரவில்லை. அதேபோல் நெல் காப்பீட்டு இழப்பீடும் மாவட் டத்தில் உள்ள 520 வருவாய் கிராமங்களில் 77 கிராமங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் வழங்க மறுக்கின்றனர். இதனால் காப்பீடை பதிய முடியவில்லை.

சிவகங்கை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் வைகை பூர்வீக பாசனப் பரப்பு உள்ளது. பெரியாறு அணை, வைகை அணை தண்ணீர் திறக்க வேண்டும். கூட்டுறவு சங் கங்களில் பயிர்க் கடன் முறையாக வழங்கவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் பி.மது சூதன்ரெட்டி பேசியதாவது: உரங் கள் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறைவான பகுதிகளுக்கு மட்டுமே பயிர்க் காப்பீட்டு இழப்பீடு அறிவிக்கப்பட்டது குறித்து ஆய்வு நடக்கிறது. விவசாயப் பணிகளுக்கு தடையின்றி மின் விநியோகம் செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x