Published : 02 Nov 2021 03:10 AM
Last Updated : 02 Nov 2021 03:10 AM

14 சதவீத அகவிலைப்படியை முன் தேதியிட்டு வழங்க கோரிக்கை :

செங்கல்பட்டு: அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் 2-வது மாவட்ட பேரவை கூட்டம் நேற்று முன்தினம் மாவட்ட தலைவர் கே.வி.வேதகிரி தலைமையில் செங்கல்பட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் 14 சதவீத அகவிலைப்படியை 1.7.21 முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு அங்கன்வாடி, ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், செங்கல்பட்டு நகரில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநிலத் துணைத் தலைவர் த.குப்பன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.சண்முக சுந்தரம், செங்கல்பட்டு வட்டக் கிளை தலைவர் ஓ.செல்வமணி, கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் வெ.லெனின் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x