Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM
தமிழ்நாடு பாசன நவீன வேளாண்மை திட்டத்தின் கீழ் குறிஞ் சிப்பாடி வட்டாரத்தில் பரவனாறு உபவடிநிலப் பகுதியில் வேளாண் துறை சார்பில் நெல்சாகுபடியில் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்த உழவர் வயல் வெளிப் பள்ளி அரங்கமங்கலம் கிராமத் தில் நேற்று முன்தினம் நடை பெற்றது.
குறிஞ்சிப்பாடி வேளாண்உதவி இயக்குநர் பூவராகன் தலைமை தாங்கி உழவர் வயல் வெளிப் பள்ளியை தொடங்கி வைத்து பேசுகையில், "உழவர் வயல்வெளிப் பள்ளி மொத்தம் 6 வகுப்புகள். இதில் நிலம் தயாரித் தல், ரகம் தேர்வு, விதைநேர்த்தி, நாற்றுவிடுதல், அடியுரம் இடல், இயந்திரநடவு, களைக்கொல்லி உபயோகித்தல், உரநிர்வாகம், பாசனமுறைகள், பயிர்பாதுகாப்பு, அறுவடை தொழில்நுட்பம் மற்றும் மதிப்புகூடுதல் உள்ளிட்டவை குறித்து முன்னோடி விவசாயின் வயலிலேயே செயல் விளக்கங்கள் அமைத்து பயிற்சி நடத்தப்படும். இதில் கலந்து கொண்ட 25 விவசாயிகளும் தவறாமல் அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொள்ள வேண்டும்" என்று கேட்டு கொண்டார்.
முன்னோடி விவசாயி கள் சக்திவேல், வைத்தியநாதன், சம்பகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண் அலுவலர் ஆரோக்கியதாஸ் வரவேற்று பேசினார். இதில் விசை இயந்திரம் மூலம் களை எடுப்பது குறித்து முன்னோடி விவசாயி நாராயணன் செயல்விளக்கம் செய்து காண்பித்தார். வேளாண் அலுவலர் அனுசுயா நன்றி கூறினார். இதற் கான ஒருங்கிணைப்பை உதவி தொழில் நுட்ப மேலாளர் மனோஜ், பயிர் அறுவடை சோதனை அலுவலர் தாரணி ஆகியோர் செய்தி ருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT