செவ்வாய், நவம்பர் 05 2024
Last Updated : 28 Oct, 2021 03:08 AM
Published : 28 Oct 2021 03:08 AM Last Updated : 28 Oct 2021 03:08 AM
ஒட்டன்சத்திரம்திண்டுக்கல் மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரதமர் படத்தை வைப்பது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர், திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாஜகவினரை தாக்கிய திமுகவினரை கைது செய்யக்கோரி ஒட்டன்சத்திரத்தில் நேற்று மாலை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில் 150-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT