Published : 27 Oct 2021 03:11 AM
Last Updated : 27 Oct 2021 03:11 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தில் இதுவரை 979 பேர் சாட்சியம் :

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தில், இதுவரை 979 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை, 30 கட்ட விசாரணை நடத்தியுள்ளது. 962 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளது. ஆணையத்தின் 31-வது கட்ட விசாரணைகடந்த 20-ம் தேதி தொடங்கியது.

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பிரேதபரிசோதனை செய்த மருத்துவர்கள், துப்பாக்கிகளை பரிசோதனை செய்த தடயவியல் நிபுணர்கள், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த வட்டாட்சியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 8 நாட்களாக நடைபெற்ற இந்த விசாரணை நேற்று நிறைவுபெற்றது.

இதுகுறித்து, ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர்கூறியதாவது:

இம்முறை விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம்அளிக்க 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களில்17 பேர் சாட்சியம் அளித்தனர்.இதுவரை 1,360 பேருக்கு சம்மன்அனுப்பப்பட்டதில், 979 பேர்ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம்அளித்துள்ளனர்.

1,223 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 16-ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறும். அதில் துப்பாக்கி சூடுநடத்திய போலீஸாரிடம் விசாரணை நடத்த உள்ளோம்.

அதன்பிறகு, அப்போதைய மாவட்ட ஆட்சியர், எஸ்பி, டிஐஜி,ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். முன்னாள் முதல்வரிடம் விசாரணை நடத்த தேவை இல்லை.நடந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள், அதனை அறிந்தவர்களிடம் மட்டும் விசாரணை நடத்தப்படுகிறது. ஆணைய விசாரணையை அரசு நிர்ணயித்துள்ள கால அவகாசத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.

இதுவரை 1,360 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில், 979 பேர் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம்அளித்துள்ளனர். 1,223 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x