Published : 20 Oct 2021 03:09 AM
Last Updated : 20 Oct 2021 03:09 AM

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை : மனநல மையத்தில் பெண் தற்கொலை :

ராமநாதபுரம்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ரெங்கன் (32). இவரது மனைவி ஐஸ்வர்யா (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முகநூல் மூலம் ராமநாதபுரம் மாவட்டம், கொம்பூதியைச் சேர்ந்த திருமணமாகாத விஜய் (31) என்பவருடன் ஐஸ்வர்யா பழகினார். ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகவில்லை என நினைத்த விஜய்யும் அவருடன் நெருங்கிப் பழகினார். இதற்கிடையே, சில நாள்களுக்கு முன்பு ராமநாதபுரத்துக்கு வந்த ஐஸ்வர்யா விஜய்யைச் சந்தித்தார். இதற்கிடையே மனைவியைக் காணவில்லை என ரெங்கன் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கி

இதுகுறித்து ரெங்கனுக்கு உறவினர் மூலம் விஜய் தகவல் தெரிவித்தார். அதனையடுத்து ரெங்கன் ராமநாதபுரம் வந்தார். அங்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த விஜய், ஐஸ்வர்யா மற்றும் ரெங்கன் உள்ளிட்டோாிடம் மகளிர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை கூறினர்.

பின்னர், ஐஸ்வர்யாவை திருச்செந்தூர் போலீஸாரிடம் ஒப்படைக்கும் வரை அவரை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மனநல ஆலோசனை மையத்தில் தங்க வைத்தனர். அங்கு பெண் போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை குளியலறைக்கு சென்ற ஐஸ்வர்யா நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த பெண் போலீஸும், செவிலியரும் சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x