Published : 19 Oct 2021 03:09 AM
Last Updated : 19 Oct 2021 03:09 AM

அருப்புக்கோட்டை அருகே - வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் :

பாலையம்பட்டியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் மாணவிக்கு இலவச கண்ணாடி அணிவிக்கும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன். அருகில் அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி உள்ளிட்டோர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை பாலையம் பட்டி மற்றும் திருச்சுழியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மூலம் "கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின்" கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். ராமநாதபுரம் எம்.பி. கே.நவாஸ்கனி முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இம்முகாமில் தமிழ்நாடு முதலமைச்சரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத் தின் மூலம் 15 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச கண்ணாடிகளையும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு மகப்பேறு நிதியுதவிக்கான காசோலைகளை யும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 10 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நல பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், சிறப்பாக பணியாற்றிய 6 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், 5 பயனாளிகளுக்கு மருந்து பொருட்களையும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளையும் அமைச்சர்கள் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x