Published : 19 Oct 2021 03:10 AM
Last Updated : 19 Oct 2021 03:10 AM

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம் :

கரூர்/ திருச்சி/ திருவாரூர்

கரூர் நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் குத்துவிளக்கேற்றி, தீபா வளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.

கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் அ.கோபால், கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் மோகன்ராஜ், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கரூர் கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்தார்.

இதேபோல, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள கோ-ஆப்டெக்ஸ் பொதிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘கடந்தாண்டு கோ-ஆப்டெக்ஸ் திருச்சி பொதிகை விற்பனை நிலையத்தில் ரூ.1.74 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டுக்கு ரூ.3.50 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி, முதுநிலை மேலாளர் (வடிவமைப்பு- உற்பத்தி) இரா.சீனிவாசன், திருச்சி பொதிகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் அ.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, திருவாரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x