Published : 19 Oct 2021 03:10 AM
Last Updated : 19 Oct 2021 03:10 AM
திருவண்ணாமலை பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனையை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
தி.மலை நகரம் திருமஞ்சன கோபுர வீதியில் உள்ள பவுர்ணமிகோ-ஆப்டெக்ஸ் கடையில் ‘தீபாவளி சிறப்பு விற்பனை’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் குத்து விளக்கு ஏற்றி வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்து, சேலை உள்ளிட்ட துணி ரகங்களை பார்வையிட்டார். வேலூர் வட்டார கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் இசக்கிமுத்து, தி.மலை பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விற்பனை குறித்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “கோ-ஆப்டெக்ஸ் என அழைக் கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ல் தொடங் கப்பட்டு 86 ஆண்டுகளாக வாடிக் கையாளர்களுக்கு சேவைபுரிந்து வருகிறது. வாடிக்கையாளர் களின் ரசனைக்கு ஏற்ப புதிய வடிவமைப்பில் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கைத்தறி நெசவாளர் களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
புதிய வடிவமைப்பில் பட்டு மற்றும் கைத்தறி ரகங்கள், ஆர்கானிக் மற்றும் கலங்காரி காட்டன் புடவைகள் மிக குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பருத்தி ரக சேலைகள், போர்வைகள், லுங்கிகள், திரைச்சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், குர்தீஸ் மற்றும் எண்ணற்ற ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகிறது. இந்தாண்டின் புதிய வரவுகளாக சில்க் லினன் சேலைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் கலெக் ஷன் போர்வைகள், சாம்பிரே போர்வைகள், பாலி விஸ்கோஸ் சூட்டிங் ஆகியவை விற்பனைக்கு உள்ளன.
தூயப்பட்டு மற்றும் அசல் ஜரிகைகளால் தயாரிக்கப்பட்ட திருமண பட்டுப்புடவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை பல வண்ணங்களில் சங்கத்தின் விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்றுமதி ரகங்களான ஏப்ரான், குல்ட், மெத்தைகள், கையுறைகள், டேபுள்மேட், ஸ்கிரீன் துணிகள், தலையனை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் ஆகியவை வரவேற்பை பெற்றுள்ளன.
வேலூர் மண்டல கோ-ஆப்டெக்ஸ் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண் ணாமலை, சித்தூர், திருவள்ளுர் மாவட்டங்களில் 15 விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன.
கடந்தாண்டு தீபாவளிக்கு ரூ.7.67 கோடிக்கு துணிகள் விற்பனையானது. இந்தாண்டு இலக்காக ரூ.20 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் மூலமாக கடந்தாண்டு ரூ.1.47 கோடிக்கு விற்பனையானது. இந்தாண்டு ரூ.2.85 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய திருநாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளிக்கான சிறப்பு விற்பனையில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT