வெள்ளி, ஜனவரி 17 2025
Last Updated : 18 Oct, 2021 03:12 AM
Published : 18 Oct 2021 03:12 AM Last Updated : 18 Oct 2021 03:12 AM
மத்திய கல்வி அமைச்சர், கேந்திரிய வித்யாலயா சங்கதன் ஆணையர் ஆகியோருக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ராமேசுவரம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஒரே நேரத்தில் 8 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படும். நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கக்கோரி தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் ஆவண செய்ய வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT