Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் - மாவட்ட ஊராட்சி குழு பதவியை தக்கவைத்தது திமுக : மயிலாடுதுறையில் திமுக, அதிமுக தலா 1 ஒன்றியக்குழு உறுப்பினர் இடத்தை கைப்பற்றின

தஞ்சாவூர்/ திருவாரூர்/ நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடை பெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் வென்று மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவி மற்றும் இரு ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவியிடங்களை திமுக தக்கவைத்துக் கொண்டது.

தஞ்சாவூர் மாவட்டம் 16-வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் 1- வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் 24-வது வார்டு உறுப்பினர் பதவிகளில் காலி யிடங்கள் ஏற்பட்டதை அடுத்து, கடந்த 9-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் 16- வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்ட ராதிகா கோபிநாத் வெற்றி பெற்றார்.

ஒரத்தநாடு 1-வது வார்டு ஒன்றி யக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட கா.வெற்றிச்செல்வியும், கும்பகோ ணம் ஒன்றியம் 24-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்த லில் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த என்.சசிக்குமாரும் வெற்றி பெற்றனர்.

இந்த 3 வார்டுகளிலும் ஏற் கெனவே திமுக வெற்றி பெற்றி ருந்தது. இடைத் தேர்தல் வெற்றி மூலம் அதை மீண்டும் தக்க வைத்தது.

திருவோணம் ஒன்றியம் அதம்பை ஊராட்சித் தலைவராக ப.அபிராமி, திருவையாறு ஒன்றி யம் வளப்பகுடி ஊராட்சித் தலை வராக நா.குளுந்தாயி, வெங்கடச முத்திரம் ஊராட்சித் தலைவராக ஜி.அமுதா, திருவிடைமருதூர் ஒன்றியம் விளாங்குடி ஊராட்சித் தலைவராக வேணுகோபாலன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மேலும், 16 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் 18-வது வார்டு ஒன்றியக் குழு உறுப் பினர் தேர்தலில் திமுக வேட் பாளர் ரா.உமாமகேஸ்வரி 2266 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சத்தியவாணிமுத்து 737 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பெற்றார். முத்துப்பேட்டை ஒன்றியம் 11-வது வார்டு ஒன்றியக் குழு உறுப் பினர் தேர்தலில் திமுக வேட் பாளர் சி.மோகன் 2,056 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ரா.பேபி 1777 வாக்குகள் பெற்று 2-வது இடம் பெற்றார்.

கொரடாச்சேரி ஒன்றியம் விஸ்வ நாதபுரம் ஊராட்சித் தலைவராக அ.ஆன்ஸி பிரின்ஸிலா, பள்ளி வாரமங்கலம் ஊராட்சித் தலைவ ராக கா.சுப, குடவாசல் ஒன்றி யம் மணவாளநல்லூர் ஊராட்சித் தலை வராக க.பிரபாகரன், மன்னார் குடி ஒன்றியம் மூவாநல்லூர் ஊராட்சித் தலைவராக ஏ.ரவி ஆகியோர் வெற்றி பெற்றனர். வலங்கைமான் ஒன்றியம் திரு கோணமங்கலம் ஊராடச்சித் தலைவராக எஸ்.மகேஸ்வரி ஏற்கெனவே போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டார்.

மேலும், 20 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டக் குழு உறுப்பினர் தேர்தல்வாக்கு எண் ணிக்கையின் 10-வது சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் ரமேஷ் 7,825 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வீரமணி 6,085 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் குருபரன் 4,823 வாக்குகளும் பெற்றிருந்தனர். திமுக வேட்பாளர் 1,789 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில்...

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சித் தலைவராக முகமது சலாவுதீன், கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சித் தலைவராக கா.லேகா, வேதாரண்யம் ஒன்றி யம் கத்திரிபுலம் ஊராட்சித் தலைவராக வீரமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், 8 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில்...

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் 15-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினராக 2,019 வாக்குகள் பெற்று மா.ரமேஷ் ராக்கெட் (திமுக), செம்பனார்கோவில் ஒன்றியம் 30-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினராக 2,249 வாக்குகள் பெற்று செ.செல்வம் (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி ஊராட்சித் தலைவ ராக இ.எழிலரசி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

மேலும் இம்மாவட்டத்தில் 15 பேர் ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மூவாநல்லூரில் திமுக-அதிமுக மோதல்

திருவாரூர் மாவட்டம் மூவாநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஏ.ரவி வெற்றி பெற்றார். ரவியின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் வெடிவெடித்து கொண்டாடினர். அப்போது, அவர்களுக்கும், மற்றொரு வேட்பாளரான திமுகவைச் சேர்ந்த பிரபாகரன் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மேலும் அசம்பாவிதம் நேரிடாமல் தடுக்கும் வகையில், மூவாநல்லூர் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x