Published : 06 Oct 2021 03:11 AM
Last Updated : 06 Oct 2021 03:11 AM

பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது விதிக்கப்படும் - ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் : சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருப்பூர்

பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என, சாயஆலை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் காந்திராஜன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த 2011-ம் ஆண்டு திருப்பூரில் உள்ள அனைத்துசாய, சலவை ஆலைகள் ஒரே நாளில் மூடப்பட்டன. இதன் பின்னர் பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை அமல்படுத்தும் சாய, சலவை ஆலைகள் மட்டும் திறக்கமாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி அனுமதி வழங்கியது.

பூஜ்ஜியநிலை சுத்திகரிப்பு திட்டத்தை மேம்படுத்தி செயல் படுத்துவதற்காக தமிழக அரசு ரூ.200 கோடியை வட்டியில்லா கடனாக வழங்கியது. பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை திருப்பூரில் உள்ள 18பொது சுத்திகரிப்பு நிலையங்களிலும் செயல்படுத்த இதுவரை, ரூ.1070 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய நிதி உதவி ரூ.700 கோடி அடங்கும்.

இதுபோல் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் சுமார் ரூ.1000 கோடி அளவுக்கு முதலீடு செய்து பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு திட்டத்தைசெயல் படுத்தி வருகின்றன. திட்டத்துக்கு ஆண்டுதோறும் பராமரித்தல் உட்பட மொத்தத்தில் இதுவரை சுமார் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

18 பொது சுத்திகரிப்பு நிலையங்களும் சேர்ந்து மாதந்தோறும் ரூ.30 கோடி அளவுக்கு, சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பதற்காக செலவுசெய்கின்றன. அதாவது ஆண்டுக்குரூ.360 கோடி கழிவுநீர் சுத்திகரிப்புக்கு மட்டும் செலவிடப்படுகிறது.

பின்னலாடை துறைக்கு சாய ஆலைகள் தான் முக்கியமாக விளங்கி வருகிறது. எனவே ஏற்றுமதியாளர்கள் திருப்பூரில் உள்ள பூஜ்ஜிய நிலை சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் சாய ஆலைகளுக்கு ஜாப் ஒர்க் கொடுத்து உதவ வேண்டும். சாய ஆலைகளுக்கு முதலீடு அதிகம் தேவை.

எனவே பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மீது விதிக்கப்படும், திரும்பப் பெற முடியாத 12 சதவீத ஜி.எஸ்.டி.யினால் பொதுசுத்திகரிப்பு நிலைய உறுப்பினர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வரு கின்றனர்.

எனவே சிறு, குறு மற்றும்நடுத்தர சாய ஆலைகளை பாதுகாக்கும் வகையில் பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் மீதுவிதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக்க வேண்டும். இதனை பரிசீலித்து மத்திய, மாநிலஅரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில், துணைத்தலைவர் பக்தவச்சலம், பொதுச்செயலாளர் முருகசாமி, பொருளாளர்மாதேஸ்வரன், இணைச்செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x