Published : 02 Oct 2021 06:40 AM
Last Updated : 02 Oct 2021 06:40 AM

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் - டாஸ்மாக் கடைகள் மூடப்படும் : காஞ்சி, செங்கை ஆட்சியர்கள் அறிவிப்பு

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்.12-ம் தேதியும் மூடப்பட உள்ளன.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, செங்கல்பட்டு ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவுநடைபெறும் இடங்களில் அக். 4-ம்தேதி காலை 10 மணி முதல் அக்.6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் அக். 7-ம் தேதி காலை 10 மணி முதல் அக். 9-ம் தேதி இரவு 12 மணி வரையும் மதுக்கடைகள் மூடப்படும். அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான அக். 12-ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும்.

மேற்படி வாக்குப் பதிவு மற்றும்வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் 5 கி.மீ சுற்றளவுக்குள் இந்த மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும். இந்தப் பகுதிகளுக்குள் உள்ள தனியார் மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்களும் மூடப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு..

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (2-ம் தேதி) திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் கிளப்புகள், ஓட்டல்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் ஆகிய அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x