Published : 26 Sep 2021 03:26 AM
Last Updated : 26 Sep 2021 03:26 AM

உள்ளாட்சித் தேர்தல்: திருச்சி மாவட்டத்தில் 47 பேர் போட்டி :

திருச்சி/ அரியலூர்/ பெரம்பலூர்

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 27 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 7 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. 3 இடங்களில் மொத்தம் 18 பேர் களத்தில் உள்ளனர்.

2 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு 8 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் ஒரு மனு திரும்பப் பெறப்பட்டது. மீதமுள்ள 7 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

காலியாகவுள்ள 19 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 39 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் 7 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 9 இடங்களில் 22 பேர் களத்தில் உள்ளனர். மாவட்டத்தில் 14 பதவியிடங்களுக்கு 47 பேர் போட்டியிடுகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 11 பேரும், 13 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 27 பேரும் போட்டியிடுகின்றனர். இதில் 4 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு ஊராட்சித் தலைவர்(ஆதனூர்) மற்றும் 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே போட்டியிடுவதால் இவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். எஞ்சியுள்ள 3 ஊராட்சி வார்டுகள் உறுப்பினர் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x