Published : 23 Sep 2021 03:13 AM
Last Updated : 23 Sep 2021 03:13 AM
திருவாரூர் மாவட்ட ஊராட்சி 11-வது வார்டுக்கான இடைத்தேர்தல் அக்.9-ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் தாங்கள் மீண்டும போட்டியிட திமுக ஆதரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. ஆனால், திமுக மறுப்பு தெரிவித்துவிட்டது. வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட வீரமணி வேட்புமனு தாக்கல் செய்தார். அதேநேரத்தில், திமுக சார்பில் போட்டியிட எஸ்.ஆர்.ரமேஷ் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஒரே கூட்டணியில் உள்ள திமுகவும், இந்திய கம்யூனிஸ்ட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால், இரு கட்சிகளின் தொண்டர்கள் மத்தியிலும் குழப்பம் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT