Published : 20 Sep 2021 03:19 AM
Last Updated : 20 Sep 2021 03:19 AM

பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் - உலக ஓசோன் விழிப்புணர்வு தினம் கடைபிடிப்பு :

பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் ஓசோன் படலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கடலூர்

பரங்கிப்பேட்டையில் உள்ள அண் ணாமலை பல்கலை கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு மற்றும் சர்வதேச கடலோரப் பகுதி களை தூய்மைப்படுத்தும் தினம் கொண்டாடப்பட்டது.

அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர், புலமுதல்வர் மற்றும் சுற்றுச்சூழல்தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. சீனிவாசன் நிகழ்ச் சியை தொடக்கி வைத்தார். ஓசோன் படலத்தின் முக்கியத்துவம், அதனை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை, கடலோரப்பகுதிகளை தூய்மைப்படுத்து வதின் அவசியம் ஆகியவை பற்றி எடுத்துக்கூறினார். பேராசிரியர் அனந்தராமன் வரவேற்று பேசினார்.இணை பேராசிரியர் ஜான் அடைக்கலம் ஓசோன் படலத்தின் அவசியத் தையும் அதனை பாதுகாக்க மாணவர்கள் எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார். உதவி பேராசிரியர் குமரேசன் குளோரோஃப்ளோரோ கார்பன் குறித்து எடுத்து கூறினார்.

இதில் அனைவரும் ஓசோன் படலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் கடலோரப் பகுதிகளைசுத்தப்படுத்துவதுற்கு தேவையானஉபகரணங்களை மாணவர்க ளுக்கு வழங்கப்பட்டது. பேராசி ரியர் சவுந்திரபாண்டியன் நன்றிகூறினார்.

இதனை தொடந்து நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் தகவல் மையமும் இணைந்து பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கடற்கரை பகுதியை சுத்தம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி இணை பேராசிரியர் ராமநாதன், சுற்றுச்சூழல் தகவல் மைய ஊழியர்களான முனைவர் லெனின், விஜயலட்சுமி, செந்தில்குமார், சுப்பிரமணியன் நாகராஜன் ஆகி யோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x