செவ்வாய், நவம்பர் 26 2024
Last Updated : 14 Sep, 2021 03:14 AM
Published : 14 Sep 2021 03:14 AM Last Updated : 14 Sep 2021 03:14 AM
சிவகங்கை: சிவகங்கை நகரில் உள்ள கடைகள், சந்தைகளில் ரசாயனம் தெளித்த வாழைப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து சிவகங்கை ஆசாத் தெருவில் உள்ள வாழைத்தார் குடோனில் மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி, உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் ஆகியோர் நேற்று சோதனையிட்டனர். அங்கு ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 1.5 டன் வாழைத்தார்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு ‘சீல்’ வைத்தனர். மேலும் குடோன் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ரசாயனம் தெளித்ததை உறுதிப்படுத்த சில பழங்கள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT