Published : 12 Sep 2021 03:20 AM
Last Updated : 12 Sep 2021 03:20 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 3653 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா தலைமை வகித்தார். மக்கள் நீதிமன்றத் தலைவர் ஜி.புவனேஷ்வரி முன்னிலை வகித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வங்கி வராக் கடன் வழக்குகள் 251, நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகிற 3402 வழக்குகள் என மொத்தம் 3653 வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.8,88,93,112 தொகை வழக்கு தரப்பினருக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளுக்கு தீர்வு காண மாவட்டம் முழுவதும்பத்து அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டி ருந்தன. திண்டுக்கல்லில் நடந்த அமர்வுகளில் நீதிபதிகள் எஸ்.மீனாசந்திரா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் ஆர்.பாரதிராஜா, நீதிபதிகள் சாமுண் டிஸ்வரிபிரபா, லலிதாராணி, தமிழரசி, ஆனந்தவள்ளி, கார்த்தி கேயன், முல்லைவாணன் ஆகி யோர் வழக்குகளை விசாரித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 271 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையில் 5 அமர்வுகள், காரைக்குடி, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, சிங்கம்புணரியில் தலா ஓர் அமர்வு என 11 அமர்வுகள் அமைக்கப்பட்டன. மாவட்ட நீதிபதி சுமதி சாய்பிரியா, நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர் கருணாநிதி, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, குடும்ப நல நீதிபதி முத்துகுமரன், கூடுதல் விரைவு மாவட்ட நீதிபதி சாத்ராஜ், போக்ஸோ மாவட்ட நீதிபதி பாபுலால், தலைமை குற்றவியல் நடுவர் சுதாகர்,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகளிர் நீதிபதி பாரததேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் 66 குற்றவியல் வழக்குகள், 56 காசோலை மோசடி வழக்குகள், 67 வங்கிக் கடன் வழக்குகள், 100 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், 23 குடும்பப் பிரச்சினை வழக்குகள், 373 சிவில் தொடர்பான வழக்குகள் என 685 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 258 வழக்குகளில் தீர்வு காணப்பட்டன.
இது தவிர நீதிமன்றத்தில் தாக்கலாகாத 13 வங்கிக் கடன் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்மூலம் ரூ.2.90 கோடி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT