Published : 08 Sep 2021 03:18 AM
Last Updated : 08 Sep 2021 03:18 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் - 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது : ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மற்றும் பரிசுத் தொகையை வழங்கிய ஆட்சியர் பா.முருகேஷ். அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு நேற்று மாலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி ஆட்சியர் பா.முருகேஷ் பாராட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் கீழ்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீ.கிருபானந் தம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் வேட்டவலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) அ.முருகை யன், மேற்கு ஆரணி ஒன்றியம் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) து.விஜயலட்சுமி, செங்கம் ஒன்றியம் குப்பநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.தமிழ்கனி.

மண்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜே.ஜேம்ஸ் எட்வர்ட் தாஸ், துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) கி.முருகன், காட்டுவானத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கோ.சேட்டு, கீழாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மூ.கேசவன்.

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) ம.ரகு, ஜவ்வாதுமலை ஒன்றியம் கூட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.பரந்தாமன், திருவண்ணாமலை ஒன்றியம் சு.வாளவெட்டி ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் து.மோகன்ராஜ்.

தண்டராம்பட்டு ஒன்றியம் ந.மோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.அசோகன், செய்யாறு இந்தோ அமெரிக்கன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் க.கோவேந்தன் ஆகிய 13 ஆசிரியர்கள் 2020-21-ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது 13 ஆசிரியர்களுக்கும் வெள்ளி பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை ஆகியவற்றை ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (கூடுதல் பொறுப்பு) கிருஷ்ண பிரியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x