வெள்ளி, டிசம்பர் 27 2024
Last Updated : 06 Sep, 2021 03:16 AM
Published : 06 Sep 2021 03:16 AM Last Updated : 06 Sep 2021 03:16 AM
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் கள்ளநோட்டு புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்கு புகார் வந்தது. அப்பகுதியில் ராயப்பன்பட்டி சார்பு ஆய்வாளர் மாயன் தலைமை யிலான போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனைமலையன்பட்டி அருகே வெள்ளக்கரடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த கம்பத்தைச் சேர்ந்த கண்ணன் (35) என்பவரை சோதனையிட்டபோது, ரூ.500, ரூ.2,000 கள்ளநோட்டுகள் வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், வெள்ளக்கரடு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் (45) என்பவர், இந்த நோட்டுக்களை மாற்றச் சொன்னதாக கண்ணன் கூறியுள்ளார். இதையடுத்து, அலெக்ஸாண்டர் வீட்டை போலீஸார் சோதனை செய்தனர
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT