Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM
சிதம்பரத்தில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக்கூட்டம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
சிதம்பரம் வட்டாட்சியர் ஆனந்த், அண்ணாமலை நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணபாலன், சிதம்பரம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
இந்து முன்னணி கட்சியினர் சிதம்பரம், அண்ணாமலை நகர்,சிதம்பரம் தாலுகா காவல் நிலை யத்துக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், இளை ஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி ரமேஷ் ராஜ், “கரோனா தொற்று காரணமாக விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்பது போன்ற நிகழ்வுகள் நடத்தக்கூடாது’’ என்றார். கூட்டத்தில் பங் கேற்றவர்கள் விநாயகர் சிலை வைத்து கொண்டாட அனுமதி கேட்டனர்.
அதற்கு டிஎஸ்பி, கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு எடுத்துள்ள இந்த நடவ டிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என் றார்.
இந்தக் கூட்டத்தில் கரோனா விழிப்புணர்வு பாடலை அண்ணாமலை நகர் தலைமை காவலர் சிவபெருமான் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் தனசேகரன், சுரேஷ் முருகன், மகேந்திரன், ஆனந்தகுமார், தியாகராஜன் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
கரோனா தொற்று காரணமாக விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT